வடசென்னை வளர்ச்சி சென்னையாக ரூ6400 கோடி ஒதுக்கீடு ... முதல்வர் பெருமிதம்... !

 
ஸ்டாலின்

தமிழகத்தின் தலைநகர் சென்னை புளியந்தோப்பில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வர் உரையாற்றினார். அதில்  திமுக அரசு மத்திய, தென் சென்னையை சாட்டிலும் வடசென்னைக்கு ஏராளமான திட்டங்களை கொடுத்துள்ளது.  வடசென்னை வளர்ச்சிக்காக ரூ.6400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வடசென்னையில் உள்ள எளிய மக்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் கடிதம்

தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 90%-க்கும் மேல் நிறைவேற்றி விட்டோம். விடியல் பயணம், புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம் என தேர்தல் வாக்குறுதியாக சொல்லப்படாத பல திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளோம்.வட சென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்றி வருகிறோம்.

ஸ்டாலின்

வடசென்னை எந்த அளவுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததோ அந்நிலையை மாற்றி வளர்ச்சி சென்னையாக உருவெடுத்து வருகிறது. வடசென்னை பகுதியை தென்சென்னைக்கு இணையாக மேம்படுத்த வேண்டும் என பல திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ1000 கோடி இல்லை, ரூ6400 கோடியாக வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web