₹64,000 கோடியில் பிரம்மாண்ட திட்டம்... "ஒலிம்பிக் 2036” நடத்த இந்தியா முழுவீச்சில் தயார்!" - பிரதமர் மோடி அறிவிப்பு!

 
மோடி

வாரணாசி: உலக விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகளை வரும் 2036-ஆம் ஆண்டு இந்தியாவில் நடத்துவதற்கான தீவிர முயற்சிகளில் மத்திய அரசு இறங்கியுள்ளதாகப் பிரதமர் மோடி இன்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் நடைபெற்ற 72-வது தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள விளையாட்டுத் துறை முன்னேற்றங்களைப் பட்டியலிட்டார்: "ஏற்கனவே பிபா (FIFA) 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை, ஹாக்கி உலகக்கோப்பை மற்றும் செஸ் ஒலிம்பியாட் போன்ற 20-க்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. 2030 காமன்வெல்த் போட்டிகளும் இந்தியாவில் நடைபெற முடிவாகியுள்ள நிலையில், இப்போது நமது அடுத்த இலக்கு 2036 ஒலிம்பிக் போட்டிகள் தான்."

ஒலிம்பிக்

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான மையப்புள்ளியாகக் குஜராத்தின் ஆமதாபாத் நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காகத் தீட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட திட்டங்கள் பின்வருமாறு: இதற்கென சுமார் ₹34,700 கோடி முதல் ₹64,000 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆமதாபாத் மற்றும் காந்திநகர் ஆகிய இரு நகரங்களையும் உள்ளடக்கி, உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு அரங்குகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பம் மற்றும் வசதிகள் குறித்துச் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் (IOC) இந்திய அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

இந்தியாவின் விளையாட்டுத் திறமை உலக நாடுகளுக்குத் தெரிய வேண்டும் என்றும், விளையாட்டு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் சர்வதேச அளவில் இந்தியா முன்னணி நாடாக மாறும் என்றும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!