சரெலென கிலோ ரூ.8க்கு குறைந்த தக்காளி விலை... இல்லத்தரசிகள் மகிழ்ச்சி! இன்றைய காய்கறி விலை விபரம்!

 
தக்காளி

இல்லத்தரசிகளுக்கு உற்சாகமான செய்தியாக தக்காளி விலை அதிக வரத்து காரணமாக கடுமையான சரிவை சந்தித்துள்ளது.  கடந்த வாரம் வரையில் கிலோ ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளில் நேற்று மார்க்கெட்டுக்கு அதிக வரத்து காரணமாக ஒரு கிலோ தக்காளி ரூ.8க்கு விற்பனை செய்யப்பட்டது. 

தக்காளி

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் தினந்தோறும் விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில் தற்போது பல மாவட்டங்களில் இருந்தும் தக்காளி வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக நேற்று தக்காளி விலை கடுமையான சரிவை சந்தித்தது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தக்காளி விலை நேற்று ஒரு கிலோ ரூ.8க்கு விற்பனை செய்யப்பட்டது. 

மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!

அதே போன்று நேற்று ஒரு கிலோ பீன்ஸ் ரூ.20க்கும், கத்திரிக்காய் ரூ.10க்கும், முட்டைக்கோஸ் ரூ.4க்கும், குடை மிளகாய் ரூ.20க்கும், கேரட் ரூ.30க்கும், காளிபிளவர் ரூ.10க்கும், தேங்காய் ரூ.25க்கும், முருங்கைக்காய் ரூ.60க்கும், வாழைக்காய் ஒன்று ரூ.3க்கும், வெண்டைக்காய் ரூ.20க்கும், எலுமிச்சை ரூ.30க்கும், கோவைக்காய் ரூ.20க்கும், மாங்காய் ரூ.60க்கும், நூக்கல் ரூ.10க்கும், வெங்காயம் ரூ.20க்கும், சாம்பார் வெங்காயம் ரூ.30க்கும், உருளைக்கிழங்கு ரூ.15க்கும், முள்ளங்கி ரூ.10க்கும், அவரைக்காய் ரூ.20க்கும், புடலங்காய் ரூ.15க்கும், தக்காளி ரூ.8க்கும் விற்பனை செய்யப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web