திருமணத்தில் ரூ.8.5 கோடி இறைப்பு... பூக்களுக்குப் பதில் பண மழை - வைரலாகும் வீடியோ!

 
திருமணத்தில் பணமழை

இந்தியத் திருமணங்கள் என்றாலே ஆடம்பரத்திற்குப் பஞ்சமிருக்காது. ஆனால், பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி, ஆடம்பரத்தின் உச்சத்தைத் தொட்டுள்ளது. சமூக வலைதளங்களில் "Cash Party" என்று அழைக்கப்படும் இந்த வீடியோ இப்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், மணமகள் திருமண உடையில் மேடைக்கு அருகே வந்து நிற்கிறார். அவரை வரவேற்க மணமகன் குடும்பத்தினர் வரிசையாகக் காத்து நிற்கின்றனர். பொதுவாக மணப்பெண் வரும்போது பூக்களைத் தூவி வரவேற்பதுதான் வழக்கம். ஆனால், இங்கே காட்சியே வேறாக இருந்தது.


முதலில் மணமகன் தனது கையில் வைத்திருந்த கட்டுக்கட்டான ரூபாய் நோட்டுகளை மணமகள் மீது தூவி தனது அன்பை வெளிப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து மணமகன் வீட்டார் ஒவ்வொருவராக வந்து, தங்களது கைகளில் இருந்த ரொக்கப் பணத்தை மணமகள் மீது மழையாகப் பொழிந்தனர். மணமகளை வரவேற்கும் இந்த ஒரு சடங்கிற்காக மட்டுமே சுமார் 8.5 கோடி ரூபாய் ரொக்கம் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். இது குறித்துப் பயனர்கள் இருவேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்: "இது அவர்களின் கலாச்சாரம் மற்றும் மகிழ்ச்சியின் வெளிப்பாடு, இதில் தவறு ஒன்றும் இல்லை" என ஒரு தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

கல்யாணம்

"பணத்தை இப்படி வீணாக்குவதற்குப் பதிலாக, ஏழை எளியவர்களுக்கு உதவியிருக்கலாம். இது ஒரு தேவையற்ற பகட்டு" எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர். பஞ்சாபில் ஏற்கனவே இது போன்ற ஆடம்பரத் திருமணங்கள் அவ்வப்போது செய்திகளில் இடம்பெறுவது வழக்கம்தான் என்றாலும், ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய தொகையைப் பண மழையாகப் பொழிந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!