விவசாயிகள் வங்கிக் கணக்கில் ₹9,000.. நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு?! PM KISAN நிதி உதவி

 
விவசாயி உதவித்தொகை

நாளை பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கையான PM KISAN நிதி உதவி உயர்வு குறித்து மிகவும் சாதகமான தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய பட்ஜெட் 2026-ல் விவசாயிகளுக்கான மிக முக்கிய அறிவிப்பாக, பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆண்டு உதவித் தொகை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தற்போது விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6,000 (மூன்று தவணைகளாக தலா ₹2,000) வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகையை ஆண்டுக்கு ₹9,000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அவ்வாறு அறிவிக்கப்பட்டால், ஒவ்வொரு தவணையும் ₹2,000-லிருந்து ₹3,000 ஆக உயரும்.

விவசாயி

2019-ம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்ட பிறகு இதுவரை உதவித் தொகை உயர்த்தப்படவில்லை. உரங்கள், டீசல் மற்றும் இதர இடுபொருட்களின் விலை உயர்ந்துள்ளதைக் கருத்தில் கொண்டும், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டும் இந்த 'ஹேப்பி நியூஸ்' நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பி.எம். கிசான் திட்டத்தின் 21-வது தவணை கடந்த நவம்பர் மாதம் வழங்கப்பட்ட நிலையில், அடுத்த தவணைக்கான (22-வது தவணை) காத்திருப்பு அதிகரித்துள்ளது.

வழக்கமாக 4 மாதங்களுக்கு ஒருமுறை நிதி விடுவிக்கப்படும். அந்த அடிப்படையில், பிப்ரவரி 2026 இரண்டாவது வாரத்தில் (பிப்ரவரி 8 முதல் 15-க்குள்) 22-வது தவணைத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட வாய்ப்புள்ளது.

விவசாயி

நாளை பட்ஜெட்டில் நிதி உயர்வு அறிவிக்கப்பட்டால், இந்த பிப்ரவரி தவணையிலிருந்தே விவசாயிகள் கூடுதல் தொகையைப் பெற வாய்ப்பு உள்ளது. இந்த நிதியுதவியைத் தடையின்றிப் பெற, விவசாயிகள் சில கட்டாயப் பணிகளைச் செய்திருக்க வேண்டும். e-KYC: உங்களது பி.எம். கிசான் கணக்கில் இ-கேஒய்சிபூர்த்தி செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யவும். ஆதார் இணைப்பு: வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் (Aadhaar Seeding). நிலப் பதிவுகள் சரியாகப் பதிவேற்றப்பட்டிருக்க வேண்டும். பி.எம். கிசான் இணையதளத்தில் (pmkisan.gov.in) உங்களது 'Beneficiary Status' செக் செய்து, அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் உடனடியாகச் சரிசெய்வது நல்லது.

யூரியா மற்றும் இதர உரங்களுக்கான மானியம் அதிகரிக்கப்படலாம். வேளாண் கடன் இலக்கு: விவசாயக் கடன்களுக்கான இலக்கு ₹25 லட்சம் கோடியாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இயற்கை விவசாயம்: இயற்கை விவசாயத்திற்கு மாறும் விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!