ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள கிளியைக் காப்பாற்ற முயன்ற தொழிலதிபர் உயிரிழப்பு!
பெங்களூருவில், தான் ஆசையாக வளர்த்த ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த கிளியைக் காப்பாற்ற முயன்ற தொழிலதிபர் ஒருவருக்கு மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளி, மின் கம்பத்தில் சிக்கியபோது, அதை மீட்க முயன்றபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பெங்களூருவின் கிரிநகர் பகுதியைச் சேர்ந்தவர் அருண் குமார் (வயது 32). இவர் வாகன எண் தகடுகள் தயாரிக்கும் தொழிலை நடத்தி வந்தார். அருண் குமார் வீட்டில் மக்கா வகை கிளி ஒன்றை ஆசையாக வளர்த்து வந்தார். இந்தக் கிளியின் மதிப்பு சுமார் ரூ. 2.5 லட்சம் என்று கூறப்படுகிறது. நேற்று காலையில், அருண் குமார் வளர்த்து வந்த அந்தக் கிளி திடீரென வீட்டில் இருந்து பறந்து சென்று, அருகிலிருந்த மின் கம்பத்தில் விழுந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருண் குமார், கிளியை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்று முயற்சித்துள்ளார்.
கிளியை மீட்கும் நோக்கில், அருண் குமார் அருகில் இருந்த காம்பவுண்ட் சுவர் மீது ஏறி, ஒரு இரும்புப் பைப் குழாயை எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக, அந்த இரும்புப் பைப் மேலே சென்ற உயர் மின்னழுத்த கம்பியில் பட்டது. இதில் அருண் குமார் மீது கடுமையாக மின்சாரம் பாய்ந்தது.

மின்சாரம் கடுமையாக தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அருண் குமார் படுகாயமடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆசையாக வளர்த்த கிளியைக் காப்பாற்ற முயன்று தொழிலதிபர் உயிரிழந்த இந்தச் சம்பவம் கிரிநகர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
