ரூ.2438 கோடி பணம் மோசடி... நடிகர் ஆர்.கே. சுரேஷ் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்!

 
ஆருத்ரா நடிகர் சுரேஷ்

ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி வழக்கில், பாஜக பிரமுகரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். நடிகர் ஆர்.கே.சுரேஷைப் பிடித்து விசாரிக்க பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு லட்சக்கணக்கானோர் தங்களது பணத்தை முதலீடு செய்திருந்தனர். ஆனால், வாக்குறுதி அளித்திருந்தபடி, முதலீட்டாளர்களுக்கு ஆரூத்ரா நிறுவனம் பணத்தை திரும்ப செலுத்தவில்லை. இதையடுத்து, ரூ.2,438 கோடி மோசடி செய்துள்ளதாக ஆரூத்ரா நிறுவனத்தின் மீது புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரின் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆர்.கே.சுரேஷ்

ஆரூத்ரா நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், அதன் மேலாண் இயக்குனர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவானார்கள். இந்நிலையில், அந்நிறுவனத்தின் இயக்குனர்களான ஹரீஷ், மாலதி ஆகியோரை கடந்த வாரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர். 

ஆர்.கே.சுரேஷ்

இந்த வழக்கில் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ரூசோவை போலீசார் கைது செய்து விசாரித்த போது, அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஆர்.கே.சுரேஷ், சுமார் 12 கோடி ரூபாய் பெற்று, இந்த வழக்கை அவர்களுக்கு சாதகமாக்கித் தருவதாக பெற்றுக் கொண்டு, துபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. நடிகர் ஆர்.கே.சுரேஷ், துபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிகிறது. நடிகர் சுரேஷ் கைது செய்யப்பட்டால் மேலும் பல அதிர்ச்சி செய்திகள் வெளிவரலாம். நடிகர் ஆர்.கே.சுரேஷைக் கைது செய்து,  தமிழகம் அழைத்து வந்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முனைப்புடன் உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web