விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம்! அசத்தலான பிரதம மந்திரி மந்தன் திட்டம்!

 
விவசாயி உதவித்தொகை

பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா, கிசான் கிரெடிட் கார்டு திட்டம், பிரதமர் கிசான் சம்மன் நிதி மற்றும் விவசாயிகளின் நல்வாழ்வுக்காக பல நலத்திட்டங்களை அரசாங்கம் நடத்துகிறது. இதைத்தொடர்ந்து, இந்திய அரசாங்கம் பிரதான் மந்திரி கிசான் மாந்தன் யோஜனா (PMKMY) விவசாயிகளுக்கு வயதாகும்போது பொருளாதார ரீதியாக உதவுவதற்காக அறிமுகப்படுத்துகிறது.

விவசாயி

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் நிலப்பதிவேடுகளில் அவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டால், விவசாய நிலம் வைத்திருக்கும் அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளும் 2 ஹெக்டேர் மற்றும் 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியத் திட்டத்தில் சேரத் தகுதியுடையவர்களாகிறார்கள். 

இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ள விவசாயிகள், 60 வயதை எட்டிய பிறகு, மாதம் ஒன்றுக்கு ரூபாய்  3000 உத்தரவாத ஓய்வூதியத்தைப் பெறுவார்கள். விவசாயி இறந்துவிட்டால், அந்த விவசாயியின் மனைவி 50 சதவிகித ஓய்வூதியத்தை "குடும்ப ஓய்வூதியமாகப்பெறத் தகுதி பெறுபவராகிறார்.

விவசாயி

வாழ்க்கைத் துணைவர்கள் மட்டுமே குடும்ப ஓய்வூதியம் பெற உரிமை உண்டு, குழந்தைகளுக்கு இல்லை. பங்கேற்பாளர்கள் மாதாந்திர பங்களிப்பாக ரூபாய்  55 மற்றும் ரூபாய் 200ஐ செலுத்தி வரவேண்டும். அவர்களுக்கு 60 வயதாகும்போது, ​​விண்ணப்பதாரர் அல்லது சந்தாதாரர் ஓய்வூதியக் கோரிக்கையை தாக்கல் செய்யலாம். ஒவ்வொரு மாதமும், அவர்களின் கணக்கில் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட ஓய்வூதியத் தொகை டெபாசிட் செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web