ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா… திருச்சி முகாமில் மோகன் பகவத் !

 
மோகன் பகவத்
 

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அதன் தேசியத் தலைவர் மோகன் பகவத், அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து உரையாடி வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ள அவர், நேற்று சென்னை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தொடர்ந்து இன்று ரயில் மூலம் சென்னையில் இருந்து திருச்சி வந்தடைந்தார்.

திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் இருந்து கார் மூலம் உறையூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்ற மோகன் பகவத், அங்கு தமிழக அளவிலான நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனைத் தொடர்ந்து மாலை சமயபுரம் அருகேயுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து உரையாடுகிறார். இன்று இரவு திருச்சியில் தங்கும் அவர், நாளை காலை விமானம் மூலம் பெங்களூரு புறப்படுகிறார்.

மோகன் பகவத் பங்கேற்கும் கூட்டங்களுக்கு க்யூஆர் கோடு கொண்ட அழைப்பிதழ் மற்றும் ஐடி கார்டுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள அவரது வருகையையொட்டி, திருச்சி ரயில் நிலையம், விமான நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!