உஷார்.. தமிழகத்தில் மீண்டும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை! இன்புளூயன்சா காய்ச்சல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

 
படுக்கை

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக புதிய வகை வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இருந்த போதிலும் மேலும் காய்ச்சல் பரவல்  இன்னும் கட்டுக்குள் வரவில்லை.  இதனால் பெரும்பாலானோர் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது அதிகமாக பரவி வரும் இன்புளுயன்சா காய்ச்சல் சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது . ப்ளு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள்  3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.  

நர்ஸ்
முதல் வகை:  லேசான காய்ச்சல்,  இருமல்
 2வது வகை:தீவிர காய்ச்சல், அதிக இருமல்
3 வது வகை : தீவிர காய்ச்சல், தொண்டை வலி  மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சுவலி

கொரோனா
தீவிர காய்ச்சலுடன் உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டோர்,  இணைநோய்கள் இருப்போர். முதல் 2 வகை பிரிவினர் இன்புளுயன்சாவிற்கான பரிசோதனை அல்லது மருத்துவமனையில் அனுமதி என எதுவும் தேவையில்லை.  இந்த அறிகுறிகளுடன் இருப்பவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது எனவும் கூறப்பட்டுள்ளது.

3 வது வகை பிரிவினர் அதாவது  தீவிர காய்ச்சல், தொண்டை வலி ஆகியவற்றோடு மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சுவலி இருப்பவர்கள் , இரத்த அழுத்த குறைவு இருப்பவர்கள், இடைவிடாத தொடர் காய்ச்சல், உணவு உண்ணாமை இருப்பவர்கள் இவர்களுக்கு உடனடியாக இன்புளுயன்சாவை கண்டறிவதற்கான RT PCR பரிசோதனை கட்டாயம் . 

இவர்கள் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்போர் 24 மணி நேரமும் 104 மற்றும் 108 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் மருத்துவமனைகளில் பணிபுரிபவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் ஆய்வகங்களில் பணி புரிபவர்கள்  கட்டாயம் மூன்றடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும்.  அத்துடன் மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள்  மற்றும் இணைநோய் இருப்பவர்களும் ப்ளூ தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அந்த வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web