நரபலி வதந்தி... ஊரையே பதற வைத்த சிறுமி... கடத்தல் புகாரில் திடீர் திருப்பம்!

 
சிறுமி கடத்தல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பள்ளிக்குச் சென்றதாகக் கூறப்பட்ட 8 வயதுச் சிறுமி காணாமல் போன சம்பவம், கிராம மக்கள் மற்றும் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு ஊர்களைச் சல்லடை போட்டுத் தேடியப் பெற்றோர் மற்றும் போலீசாருக்கு, இறுதியில் அந்தச் சிறுமி வீட்டிலேயே கட்டிலுக்கு அடியில் உறங்கிக் கொண்டிருந்தது தெரிய வந்தது, 

ஆம்பூர் அடுத்த கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி பாபு என்பவரின் இரண்டாவது மகள் தனஸ்ரீ (8), அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்புப் படித்து வருகிறார். நேற்று காலை வீட்டிலிருந்து "பள்ளிக்குச் செல்கிறேன்" என்று கூறிவிட்டு வெளியேறிய தனஸ்ரீ, காலை 10 மணி ஆகியும் பள்ளிக்கு வரவில்லை. இதனால் பள்ளியில் இருந்து பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிறுமி

இது குறித்த தகவல் கேட்டுப் பதறிப் போன பெற்றோர், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் இணைந்து பல்வேறு பகுதிகளில் சிறுமியைத் தீவிரமாகத் தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறுமி கிடைக்காததால், பெற்றோர் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தனஸ்ரீ நேற்று காலை அவருடைய தாயாரின் செல்போனை எடுத்துக் கொண்டுப் பையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. மேலும் வெங்கடசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளியூரைச் சேர்ந்த மூன்று குடுகுடுப்பைக்காரர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். மாந்திரீகம் செய்வதற்காகச் சிறுமியைக் கடத்திச் சென்றிருக்கலாம் என்ற அச்சத்தில், கிராம மக்கள் அந்த குடுகுடுப்பைக்காரர்களைத் தேடிச் சென்று, அதில் இருவரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். உமராபாத் காவல் ஆய்வாளர் கிஷோர் குமார் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் தனஸ்ரீயை தீவிரமாகத் தேடி வந்தனர்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

இந்நிலையில் மாலை 5 மணி அளவில் போலீசார் மீண்டும் வீட்டில் தீவிர ஆய்வு செய்த போது, அனைவரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பம் காத்திருந்தது. வீட்டில் இருந்த அறையில் இருந்த கட்டிலுக்கு அடியில் சிறுமி தனஸ்ரீ அமைதியாக உறங்கிக் கொண்டு இருந்ததைக் கண்டுபிடித்தனர். பல மணி நேரம் ஊரையே பதற்றத்தில் ஆழ்த்திய சிறுமி பத்திரமாக வீட்டிலேயே தூங்கிக் கொண்டிருந்ததால் பெற்றோர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. தேடும் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!