டாலருக்கு எதிராக ரூபாய் மேலும் சரிவு... 92.37 ஆக வீழ்ச்சி!
அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் பதற்றம் உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டதால் சந்தைகளில் அலைச்சல் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஒரு பீப்பாய்க்கு 100 டாலரை கடந்துள்ளது.

இதன் தாக்கமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மேலும் சரிந்துள்ளது. நேற்று வர்த்தக முடிவில் 92.04 ஆக இருந்த ரூபாய் மதிப்பு, இன்றைய வர்த்தக தொடக்கத்தில் 33 பைசா குறைந்து 92.37 ஆக வீழ்ச்சியடைந்தது. கடந்த மார்ச் 9ஆம் தேதி ரூபாய் மதிப்பு 92.35 ஆக சரிந்ததே இதுவரை அதிகபட்ச வீழ்ச்சியாக இருந்தது.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் உலகளவில் டாலரின் மதிப்பு அதிகரித்து வருவது ரூபாயின் மதிப்பை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் இன்று சரிவை சந்தித்துள்ளன. இதேவேளை உலக நாடுகளின் நலன் கருதி ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
