ரஷியாவிலிருந்து இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் அனுப்பத் தயார்!

 
ரஷ்யா

மேற்கு ஆசியாவில் உருவான போர் பதற்றத்தால் எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் உருவாகும் சூழல் நிலவி வருகிறது. பாரசீக வளைகுடாவையும் அரபிக்கடலையும் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளதால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்த சூழலில் இந்தியாவுக்கு உதவத் தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது. இந்திய கடல் எல்லைக்கு அருகில் 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல்கள் தயாராக உள்ளதாகவும், அவற்றை உடனடியாக இந்தியாவுக்கு அனுப்ப முடியும் என்றும் ரஷிய அதிகாரிகள் கூறியுள்ளனர். அவை ஒரு வாரத்துக்குள் இந்தியாவை அடையும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தினமும் சுமார் 56 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்படுகிறது. தற்போது சுமார் 25 நாள்களுக்கு தேவையான இருப்பு இருந்தாலும், நிலைமை நீண்டால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை சமாளிக்க மத்திய அரசு அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!