ரஷ்யா, உக்ரைன் தலைநகர் மீது ஏவுகணை தாக்குதல்... 14 பேர் பலி!
1209 வது நாளாக இன்று உக்ரைன், ரஷியா இடையேயான போர் நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் முயற்சித்து அது தோல்வியில் முடிந்தது.
போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியா, உக்ரைன் நடத்திய நேரடி பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. ஜூன் 1ம் தேதி உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷிய போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. இதனால், இரு தரப்பு மோதல் தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

அந்த வகையில் இன்று உக்ரைன் மீது ரஷியா அதிகாலை தாக்குதல் நடத்தியது. டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 14 பேர் உயிரிழந்ததாகவும், 44 படுகாயம் அடைந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
