ரஷியா தாக்குதல் தீவிரம்… போர் முடிவுக்கு அமெரிக்கா காலக்கெடு!
சுமார் 4 ஆண்டுகளாக நீடித்து வரும் ரஷியா–உக்ரைன் போருக்கு ஜூன் மாதத்துக்குள் தீர்வு காண அமெரிக்கா காலக்கெடு விதித்துள்ளது. இந்த சூழலில் ரஷிய படைகள் வான் வழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன. இதனால் போர் நிலைமை மேலும் பதற்றமாகியுள்ளது. இரு நாடுகளும் சமரச முயற்சியில் ஈடுபடுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள க்ராமடார்ஸ்க் நகரில் ரஷியா தாக்குதல் நடத்தியது. குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதலின் போது 9 மாடி கட்டடத்தில் தீப்பற்றி பரபரப்பு ஏற்பட்டது. அவசரகால குழுவினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தினர்.

மேலும் போல்டோவா பகுதியில் உள்ள எரிசக்தி கட்டமைப்பும் தாக்குதலில் சேதமடைந்துள்ளது. குளிர்காலத்தில் மின்நிலையங்களை குறிவைத்து தாக்குவது ரஷியாவின் முக்கிய யுக்தியாக இருப்பதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. டான்பாஸ் பகுதியை விட்டு வெளியேற உக்ரைனுக்கு ரஷியா அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் அந்த பகுதியை விடமாட்டோம் என்று உக்ரைன் உறுதி தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
