உக்ரைனில் மீண்டும் ரஷியா டிரோன் தாக்குதல்... 6 பேர் படுகாயம்!
உக்ரைன்–ரஷியா போர் நான்காவது ஆண்டாக நீடித்து வரும் நிலையில், சமாதான முயற்சியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை முன்மொழிந்துள்ளார். ஆனால் அதில் சில நிபந்தனைகளை உக்ரைன் ஏற்க மறுப்பதால், போருக்கு முடிவு காண முடியாமல் சூழ்நிலை தொடர்கிறது.
இந்த நிலையில், உக்ரைனின் ஒடேசா பகுதியில் ரஷிய ராணுவம் புதிய டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்நகரில் உள்ள முக்கிய எரிசக்தி கட்டமைப்புகள் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஆறு பேர் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீப மாதங்களாக உக்ரைனின் மின்சாரம் தொடர்பான கட்டமைப்புகளை ரஷியா தொடர்ந்து குறிவைத்து தாக்கி வருகிறது.

இதன் காரணமாக கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் பல பகுதிகளில் நீண்ட நேர மின்தடைகள் ஏற்பட்டன. குளிர்காலம் முழுவதும் இதே நிலை தொடர வாய்ப்புள்ளதாக எரிசக்தி துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
