புதிய திருப்பம்... சபரிமலை தங்கம் கொள்ளை… நடிகர் ஜெயராம் சாட்சியாளராக வர வாய்ப்பு!
நாடு தழுவி அதிர்ச்சியை ஏற்படுத்திய சபரிமலை தங்க கொள்ளை வழக்கில் விசாரணை நாள் கடந்த நாள் தீவிரமடைந்துள்ளது. ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவிலுக்குச் சொந்தமான ஆபரணங்களில் இருந்து தங்கம் திருடப்பட்ட இந்த வழக்கில் பலரும் கைது செய்யப்பட, புதிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளிப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த வழக்கில் நடிகர் ஜெயராம் சாட்சியாளராக வரக்கூடும் என்ற தகவல் புலனாய்வை இன்னும் பரபரப்பாக்கி உள்ளது.

வழக்கின் பல கோணங்களை ஆராய்ந்து வரும் சிறப்பு புலனாய்வு குழு, சம்பவம் நிகழ்ந்த காலப்பகுதியில் கோவில் தொடர்பான சில முக்கியமான தகவல்களை உறுதிப்படுத்த நடிகர் ஜெயராமிடம் வாக்குமூலம் பெற திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. சபரிமலைக்கு அடிக்கடி தரிசனத்திற்கு செல்வதில் பிரபலமான ஜெயராமிடம் சில சூழ்நிலை விளக்கங்கள் தேவைப்படலாம் என புலனாய்வு வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜெயராமின் சாட்சியம் வழக்கின் கதைக்களத்துக்கு புதிய திருப்பமாகவுள்ளது. தங்கம் காணாமல் போனது தொடர்பான விவகாரம் தீவிர ரீதியில் முன்னேறி வரும் நிலையில், புலனாய்வு குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
