சபரிமலை தங்கம் மோசடி: தேவசம் வாரிய முன்னாள் உறுப்பினர் சங்கரதாஸ் கைது!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடுகளைத் திருடி, அதற்குப் பதில் செம்புத் தகடுகளைப் பொருத்தி மோசடி செய்த வழக்கில், சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கோவிலுக்குப் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய சுமார் 30.3 கிலோ தங்கத்தில், 4.54 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. கோவிலில் இருந்த நிஜமான தங்கத் தகடுகளை "செம்புத் தகடுகள்" என்று போலி ஆவணம் தயாரித்து, அவற்றைச் சென்னைக்குக் கடத்தி விற்பனை செய்துள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே தேவசம் வாரிய முன்னாள் தலைவர் பத்மகுமார் (முன்னாள் சிபிஎம் எம்.எல்.ஏ), மூத்த தந்திரி கண்டரரு ராஜீவரு, அர்ச்சகர் உன்னிகிருஷ்ணன் போத்தி உட்பட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் தலைவர் பத்மகுமார் பதவிக் காலத்தில், நிர்வாகக் குழு உறுப்பினராகப் பணியாற்றியவர் கே.பி. சங்கரதாஸ். இவர் கடந்த சில நாட்களாகத் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கேயே வைத்து சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் இவரைக் கைது செய்தனர். தங்கம் காணாமல் போன காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளில் சங்கரதாஸிற்கு நேரடித் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
