சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு... நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்த முடிவு!

 
ஜெயராம் ஜெயராம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடந்ததாகக் கூறப்படும் தங்கம் திருட்டு விவகாரம் தொடர்பாகப் பிரபல நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்தக் கேரளச் சிறப்புக் குழு முடிவு செய்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடுகளை, அவை வெறும் செம்புத் தகடுகள் என்று கூறி, சீரமைப்புப் பணிகளுக்காகச் சென்னைக்குக் கொண்டு சென்ற விவகாரம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாகக் கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஜெயராம்

இந்த விவகாரம் தொடர்பாகச் சிறப்புக் குழு இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது. இந்த வழக்குகளில், தங்கத் தகடுகளைச் சென்னைக்குக் கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போத்தி, செம்புத் தகடுகள் என்று சான்றிதழ் கொடுத்த சபரிமலை கோயில் முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு, முன்னாள் திருவாபரணம் கமிஷனர் பைஜு, முன்னாள் நிர்வாக அதிகாரி சுதீஷ்குமார், திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்களான வாசு மற்றும் பத்மகுமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தங்கத் தகடுகளைச் சென்னைக்குக் கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போத்தி, அதிலிருந்து தங்கத்தைப் பிரித்து எடுத்து உருக்கி விற்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அத்துடன், இந்தத் தகடுகளில் மீண்டும் சிறிது தங்க முலாம் பூசி, அதை பல்வேறு செல்வந்தர்களின் வீடுகளுக்குக் கொண்டு சென்று சிறப்புப் பூஜை நடத்திப் பணமும் வசூலித்துள்ளார்.

சபரிமலை

இந்த மோசடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள பிரபல நடிகர் ஜெயராமின் வீட்டுக்கும் இதேபோன்ற தங்கத் தகடுகளை உண்ணிகிருஷ்ணன் போத்தி கொண்டு சென்று பூஜை நடத்திப் பணம் வாங்கியுள்ளார்.

இதன் அடிப்படையில், நடிகர் ஜெயராமிடமும் விசாரணை நடத்தச் சிறப்பு புலனாய்வுக் குழு தீர்மானித்துள்ளது. இந்த வழக்கில் நடிகர் ஜெயராமைச் சாட்சியாகச் சேர்க்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் சிறப்புக் குழு போலீசார் ஜெயராமிடம் விசாரணை நடத்தச் சென்னை செல்ல உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!