சபரிமலை தங்கத் திருட்டு சர்ச்சை: முன்னாள் தலைவர் பட்மகுமார் கைது

 
பட்மகுமார்
 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரபாலகன் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கத் தகடுகள் மாயமானது தொடர்பான வழக்கில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 42 கிலோ எடையுடையதாக இருந்த தங்கத் தகடுகள், சென்னைக்கு பழுது பார்க்க அனுப்பப்பட்டபின் 4.52 கிலோ மட்டும் மீதி இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, கேரள உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை முழுமையாக தீவிரப்படுத்தியது.

விசாரணை அதிகாரிகள் நன்கொடையாளரான உன்னிகிருஷ்ணனிடமிருந்து தொடங்கி பலரை விசாரித்த நிலையில், தங்கத் தகடுகள் குறித்து தேவசம் போர்டு சமர்ப்பித்த ஆவணங்களில் பல முரண்பாடுகள் வெளிப்பட்டன. தங்கம் பதிக்கப்பட்டதாக கூறப்பட்ட துவாரபாலகர் பீடங்கள் உண்மையில் செப்புதகடுகள் என சில வாக்குமூலங்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் உன்னிகிருஷ்ணன், முராரி பாபு, முன்னாள் செயலர் ஜெயஸ்ரீ உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது

இந்த சூழ்நிலையில், முன்னாள் தேவசம் போர்டு தலைவர் பட்மகுமாரை சுற்றியுள்ள சந்தேகங்கள் அதிகரித்ததால், சிறப்பு புலனாய்வு குழு அவரை மீண்டும் விசாரித்தது. விசாரணையில், தங்கத் தகடுகள் மாயமானதில் அவருக்கும் தொடர்பு இருப்பது உறுதியாகியதால், இவர் வழக்கின் ஐந்தாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் நபராக இன்று கைது செய்யப்பட்டுள்ளார். தீபாராதனா சமயம் நடக்கும் சபரிமலையை உலுக்கிய இந்த தங்கத் திருட்டு வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மீது மாநிலம் முழுவதும் கவனம் திரும்பியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!