சபரிமலை மண்டல பூஜை ... தரிசன நேரம் நீட்டிப்பு, ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை தொடக்கம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக பக்தர்கள் பெருக்கெடுத்து வருகின்றனர். கடந்த மாதம் 16-ம் தேதி நடை திறந்தபின்னர், 41 நாள் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கருப்பு உடை, இருமுடி, சரண கோஷம்… இவை அனைத்துடனும் தினமும் லட்சக்கணக்கானோர் 18 படி ஏறி சாமியை தரிசிக்க வரிசையில் நிற்கிறார்கள்.

கடந்த 25 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், தந்திரிகள், காவல்துறை, தேவசம் வாரியத்தினர் ஆலோசித்து தரிசன நேரத்தை நீட்டித்துள்ளனர். இதன்படி முந்தைய 1 மணி பதிலாக 1.30 மணிக்கும், இரவு 11 மணி பதிலாக 11.15 மணிக்கும் நடை அடைக்கப்படும். அதிகாலை 3 மணிக்குத் துவங்கும் தரிசனம் தொடர்ந்து நடைபெறும். கூட்ட நெரிசல் குறைய இதனால் உதவுமென கோவில் நிர்வாகம் கூறுகிறது.

மண்டல பூஜை டிசம்பர் 27-ஆம் தேதி நடக்கிறது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு வரும் 26, 27-ஆம் தேதிகளில் தரிசனம் செய்ய விரும்புவோருக்காக இன்று மாலை 5 மணிக்கு துவங்குகிறது. பக்தர்கள் அதிகாரப்பூர்வ தளமான sabarimalaonline.org மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
