மண்டல பூஜையுடன் சபரிமலை நடை திறப்பு!

 
சபரிமலை
 

சபரிமலையில் மண்டல பூஜையின் முதல் நாளை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு சன்னிதானம் நடை திறக்கப்பட்டது. புதிய மேல் சாந்தி பிரசாந்த் நம்பூதிரி நடையை திறந்து வைத்து சிறப்பு பூஜைகளை ஆரம்பித்தார். இன்றைய கார்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு, ஐயப்ப பக்தர்கள் விரதத்தைத் தொடங்குவதால் சன்னிதானம் பக்தி சிறப்பால் நிறைந்தது.

சபரிமலை கூட்டம்

இன்று முதல் டிசம்பர் 27 வரை கோவில் நடை திறந்திருக்கும் நிலையில், கணபதி ஹோமம், உஷ பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திருவிதாங்கூர் தேவச்வம் போர்டு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் விர்ச்சுவல் க்யூ முறையில் தரிசன வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.

சபரிமலை

சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோயில்களிலும் கார்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கருப்பு அல்லது நீல உடை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனைக் காணத் தயாராகும் பக்தர்கள் பேருந்து, ரயில் மூலம் சபரிமலை செல்ல ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இந்த மண்டல பூஜை சீசன் மகர விளக்கு விழாவுடன் ஜனவரி 14 வரை தொடரும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!