சபரிமலை சீசன்... இன்று முதல் பம்பை - தென்காசி இடையே சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

 
கர்நாடகா அரசு பேருந்து கே.எஸ்.ஆர்.டி.சி.கேஎஸ்ஆர்டிசி

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலின் மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, பம்பைக்கும் தென்காசிக்கும் இடையே இன்று (நவம்பர் 29, சனிக்கிழமை) முதல் சிறப்பு பேருந்து சேவை தொடங்கப்படுவதாகக் கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

சபரிமலை சீசனின் போது தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து வரும் பக்தர்களின் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மொத்தம் 67 வழித்தடங்களில் பேருந்து சேவைகளை நடத்தக் கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பயன் பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சபரிமலை

முதற்கட்டமாக, நேற்று (நவம்பர் 28, வெள்ளிக்கிழமை) முதல் கோயம்புத்தூர் - பம்பை இடையே சிறப்புப் பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இந்தச் சிறப்புப் பேருந்து கோயம்புத்தூரில் இருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்படும். பம்பையில் இருந்து, கோயம்புத்தூருக்குத் திரும்புவதற்கான பேருந்து காலை 9 மணிக்குப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, இன்று (நவம்பர் 29, சனிக்கிழமை) முதல் பம்பை - தென்காசி இடையே சிறப்புப் பேருந்து வசதி தொடங்குகிறது. இந்தச் சிறப்புப் பேருந்து தென்காசியில் இருந்து மாலை 7 மணிக்குப் புறப்படும். பம்பையில் இருந்து, தென்காசிக்குத் திரும்புவதற்கான பேருந்து காலை 9 மணிக்குப் புறப்படும் என்றும் கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

சபரிமலை

தென்காசிக்கு மட்டுமல்லாமல், தமிழகத்தின் மற்ற முக்கிய நகரங்களான பழனி, திருநெல்வேலி, கம்பம் மற்றும் சென்னை ஆகிய இடங்களுக்கும் பக்தர்கள் நலன் கருதி விரைவில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இது தவிர, அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் வரும் பக்தர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!