சபரிமலையில் பக்தர்கள் வெள்ளம்... உடனடி முன்பதிவு மீண்டும் 5,000 ஆகக் குறைப்பு!

 
சபரிமலை
 

சபரிமலையில் மண்டல கால தொடக்கத்திலேயே பக்தர்கள் அலைமோதும் நிலையில், நேற்று மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனம் செய்ததால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக சராசரியாக தினமும் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வந்த நிலையில், நேற்று அதிகாலை நடை திறந்ததும் சரங்குத்தி பகுதியை எட்டிய பக்தர் வரிசை கூட்டம் கட்டுக்கடங்காத சூழலை உருவாக்கியது. இரவு நடை சாத்தும் நேரத்திற்குள் 1 லட்சத்தை கடந்த விஷயம் அதிகாரிகளை அதிர வைத்தது.

சபரிமலை

முன்னதாக, அதிக நெரிசல் காரணமாக கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி உடனடி கவுண்டரில் உருவாக்கப்பட்ட 20 ஆயிரம் முன்பதிவு சீட்டுகள் 5 ஆயிரமாகக் குறைக்கப்பட்டிருந்தது. பின்னர் நிலைமை சீராகியதால் எண்ணிக்கை மீண்டும் உயர்த்தப்பட்டது. ஆனாலும், நேற்று ஏற்பட்ட கூட்டநெரிசலால் பக்தர்கள் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் நின்று தரிசனம் செய்ய வேண்டிய நிலை உருவானது.

சபரிமலை

இந்த சூழல் மீண்டும் திரும்பாதபடி, இன்று முதல் உடனடி முன்பதிவு சீட்டுகள் மீண்டும் 5 ஆயிரமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்தனர். இதனால் இன்று சபரிமலை பகுதிகளில் கூட்டம் சற்றே குறைந்து காணப்பட்டு, பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!