சபரிமலை மண்டல பூஜை நாளில் 40000 பக்தர்களுக்கு அனுமதி !
சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த நவம்பர் 16-ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. கார்த்திகை 1-ஆம் தேதி (நவம்பர் 17) முதல் வழக்கமான பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. 2026 ஜனவரி 10-ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு மூலம் தினசரி 70,000 பக்தர்கள் தரிசனம் மேற்கொண்ட நிலையில், உடனடி முன்பதிவு அடிப்படையில் தினசரி 10,000 முதல் 15,000 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

மண்டல பூஜை டிசம்பர் 27-ம் தேதி, மகர விளக்கு பூஜை 2026 ஜனவரி 14-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையில், மண்டல பூஜை முன்னிட்டு, டிசம்பர் 26 மற்றும் 27-ம் தேதிக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை தொடங்கியுள்ளது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.

திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் அறிக்கையின்படி, டிசம்பர் 26-ம் தேதி சிறப்பு தீபாராதனைக்கான தங்க அங்கி அணிவித்து நடத்தப்படும் மண்டல பூஜை முன்னிட்டு 30,000 பக்தர்கள், மண்டல பூஜை தினம் (டிசம்பர் 27) 35,000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். மேலும், இரு நாட்களும் உடனடி முன்பதிவு மூலம் 5,000 பக்தர்கள் கூட அனுமதிக்கப்படுவர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
