சபரிமலை தங்க கவச வழக்கு… நடிகர் ஜெயராமிடம் விசாரணை!
சபரிமலை கோவில் துவாரபாலர் சிலைகளின் தங்க கவசங்கள் 2019-ம் ஆண்டு செப்பனிடுவதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டன. அப்போது 42.8 கிலோ இருந்த தங்கம், திரும்ப கிடைத்த போது 38 கிலோவாக குறைந்தது. சுமார் நாலரை கிலோ தங்கம் மாயமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் உன்னிகிருஷ்ணன் போத்தி, முராரி பாபு உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக நடிகர் ஜெயராமிடம் கேரள சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று சென்னையில் விசாரணை நடத்தினர். வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

உன்னிகிருஷ்ணன் போத்தியுடன் இருந்த தொடர்பு, மதச் சடங்குகளில் பங்கேற்பு, நிதிப் பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. தங்க கவசம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என ஜெயராம் தெரிவித்துள்ளார். உன்னிகிருஷ்ணன் அழைப்பின் பேரில் பூஜைகளில் பங்கேற்றதாகவும், இருவருக்கும் இடையில் பண பரிவர்த்தனை இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
