14 வருடங்களுக்குப் பின் இன்று இந்திய ஜெர்ஸியில் களமிறங்கும் சச்சின், யுவராஜ் சிங்... எகிறும் எதிர்பார்ப்பு... ரசிகர்கள் உற்சாகம்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உலக நாடுகளின் கிரிக்கெட் வீரர்களை அச்சுறுத்தியவர் சச்சின். கிரிக்கெட்டின் கடவுளாகவே ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். யுவி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் யுவராஜ் சிங் மைதானத்தில் அதகளப்படுத்தியவர். இவர்களது அதிரடி ஆட்டம் பல வெற்றிகளைக் குவித்திருக்கிறது.
இந்நிலையில் 14 வருடங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இந்திய அணியின் ஜெர்ஸி அணிந்து இன்று மீண்டும் மைதானத்தில் களமிறங்கப் போகிறார்கள் என்பதால் கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இன்று பிப்ரவரி 22ம் தேதி சனிக்கிழமை சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ள நிலையில், இந்த தொடரின் முதல் போட்டி இன்று நவி மும்பையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி இலங்கை மாஸ்டர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் இருவரும் இந்திய அணிக்காக 2011ம் ஆண்டு உலகக் கோப்பையின் போது ஒன்றாக இணைந்து விளையாடி உள்ளனர். அதன் பின்னர் தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இவர்கள் இருவரும் இந்திய அணியின் சீருடையை அணிந்து இன்று விளையாட உள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 34000 ரன்களுக்கும் அதிகமாக குவித்துள்ளார். அதேபோல 100 சதங்களை விளாசியுள்ளார். அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தினாலும், இந்திய அணிக்காக ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். இந்நிலையில், அவர் மீண்டும் இந்திய அணியின் சீருடையில் டி20 போட்டிகளில் விளையாட இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இந்தியா உட்பட 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இந்தத் தொடரில் இடம்பெற்று விளையாடுவது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!