ஜெயலலிதா முதல் பொன்முடி வரை பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. எம்பிக்கள் பட்டியல்!

 
பொன்முடி

தமிழகத்தில் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். தீவிர விசாரணைக்கு பிறகு இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் 3 ஆண்டு சிறைத் தண்டனையும், 50 லட்சம் அபராதத் தொகையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொன்முடி அமைச்சர் பதவியை இழக்கிறார். இவர் மேல்முறையீடு செய்வதற்காக தண்டனைக் காலம் ஒரு மாதத்திற்கு பிறகு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 
இந்திய சட்டப்படி 2  ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்க நேரிடும். அதன்படி  இந்திய அளவில்  இதுவரை பதவி இழந்தவர்கள்  பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

லாலு பிரசாத்


1.மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்த சம்பவத்தில்    காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் ரஷீத் மசூத் 2013ல்  பதவி நீக்கம்  
2. கொலை வழக்கில் தண்டணை  காங்கிரஸ் பப்புலானி 2013ல் பதவி நீக்கம். 
3.   கால்நடை தீவன வழக்கில் ஐந்தாண்டு சிறை தண்டனை பெற்ற லல்லுபிரசாத் யாதவ் 2013ல் பதவி நீக்கம்
4.சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற  திமுக  மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி பதவி விலகல்  
5.கொலை வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட முகம்மது பைசல் எம்பி பதவி நீக்கம்.
6.மின்சார திருட்டு வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பாஜக   சுரேஷ் கணபதி 2014ல் பதவி   நீக்கம்
 7.குண்டர் சட்டத்தில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி  அப்சல் அன்சாரி மக்களவை உறுப்பினர் பதவி நீக்கம். 

ஜெயலலிதா பொன்முடி


8.  அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற   சமாஜ்வாதி கட்சி  அப்துல்லா ஆசாம் கான்  சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து பதவி  நீக்கம்  
9.மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தை அவதூறாக பேசிய வழக்கில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஆசம்கான் சட்டமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்.  
10.பாஜக   விக்ரம் சிங் சைனி  2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால்   சட்டமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்.  
11. தமிழகத்தில் கலவர வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி  பதவி நீக்கம்.
12. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றதில் மரணத்திற்கு பிறகு தகுதி நீக்கம். 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web