24 வயதில் சோகம்... பெண் உளவுத்துறை அதிகாரி மர்ம மரணம்!

 
மேகா உளவுத்துறை
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம், பத்தனம்திட்டாவை சேர்ந்தவர் மேகா(24). இவர் மத்திய உளவுத்துறையான ஐபியில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.

கடந்த வருடம் முதல் இவர் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் குடியுரிமை வழங்கல் பிரிவில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் விமான நிலையத்தில் தனது இரவுப் பணிகளை முடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பி சென்றுக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று காலை விமானநிலையம் அருகே உள்ள சாக்கை என்ற இடத்தில் ரயில்வே தண்டவாளத்தில் மேகா ரயில் மோதி இறந்த நிலையில் சடலமாக காணப்பட்டார்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

இது குறித்து அறிந்ததும் திருவனந்தபுரம் பேட்டை போலீசார் விரைந்து சென்று அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேகா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்டவாளம்

மத்திய உளவுத்துறை பெண் அதிகாரி ரயில் மோதி இறந்த நிலையில் சடலமாக காணப்பட்டது திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆராய்ந்து, மேலதிக தகவல்களுக்காக விசாரித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web