புதுவருஷத்தில் சோகம்... சுவிட்சர்லாந்து பாரில் பயங்கர வெடிவிபத்து... 40 பேர் பலி; நூற்றுக்கும் மேற்பட்டோர் தீக்காயம்!

 
தீ  சுவிட்சர்லாந்து போலீஸ் தீயணைப்பு

பனிச்சறுக்கு விளையாட்டிற்குப் புகழ்பெற்ற சுவிட்சர்லாந்தின் மலைப்பகுதியான கிரான்ஸ்-மொந்தனாவில் உள்ள ஒரு பாரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வெடிவிபத்து பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அஞ்சப்படுகிறது.

புத்தாண்டை வரவேற்கச் சுமார் 300-க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்களும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அந்த பாரில் திரண்டிருந்தனர். அதிகாலை 2 மணிக்கு பார் மூடப்படவிருந்த நிலையில், 1:30 மணியளவில் திடீரெனப் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தைத் தொடர்ந்து கட்டிடம் முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்ததால், உள்ளே இருந்தவர்களுக்கு வெளியேறும் வழி தெரியாமல் பெரும் குழப்பமும் நெரிசலும் ஏற்பட்டது. பலர் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.


விமான ஆம்புலன்ஸ்: பனிச்சறுக்கு மலைப்பகுதி என்பதால், காயமடைந்தவர்களை விரைவாக மீட்க ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் புகையை வெளியேற்றி, உள்ளே சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தீ

முதற்கட்டத் தகவல்களின்படி பலர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. அதிகாரப்பூர்வமான உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்த வெடிவிபத்து எரிவாயுக் கசிவு (Gas Leak) காரணமாக ஏற்பட்டதா அல்லது புத்தாண்டிற்காக வைக்கப்பட்டிருந்த அலங்கார மின்விளக்குகள் மற்றும் பட்டாசுகள் காரணமாக ஏற்பட்டதா என்பது குறித்துச் சுவிஸ் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் யாரேனும் உள்ளனரா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!