பழனிக்கு சென்று திரும்பிய போது சோகம்.. கோர விபத்தில் சிக்கி இருவர் பரிதாபமாக பலி!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, உரத்தூரைச் சேர்ந்தவர் மருது பாண்டியன் (35). அதே கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் (39), அவரது மனைவி சிலம்பரசி (33) மற்றும் அவர்களது மகன் நேத்ரன் (3) ஆகியோர் காரில் பழனிக்குச் சென்று, தெய்வ தரிசனம் செய்த பிறகு, உடுமலை அருகே உள்ள குறிஞ்சேரி கிராமத்தை ஒட்டியுள்ள 4 வழிச் சாலையில் சென்றனர்.
பிரபாகரன் காரை ஓட்டி வந்தார். அந்த நேரத்தில், அவர்கள் பயணித்த காரை மற்றொரு கார் முந்திச் சென்றது. அந்த நேரத்தில், முந்திச் செல்லும் கார் மீது மோதாமல் இருக்க இடதுபுறம் திரும்பினார். அப்போது, கார் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தடுப்பு சுவரில் மோதியது. இதில், காரின் முன்பகுதி நசுங்கியது. காருக்குள் இருந்தவர்களுக்கு தலை மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது.
அருகிலுள்ளவர்களின் உதவியுடன் உடனடியாக சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருது பாண்டியன் மற்றும் சிலம்பரசி சிகிச்சை பலனின்றி இறந்தனர். பிரபாகரனும் அவரது 3 வயது மகனும் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!