கல்யாண நாளில் சோகம்... மின்சாரம் தாக்கி இளம்பெண் மரணம்!

நேற்று காலை முதல் சுமார் 3 மணி நேரம் திருவோணம் பகுதியில் பலத்த மழை பெய்து வந்துள்ளது. அதனால் வெயில் அடித்ததும் துணிகளை துவைத்து வெயிலில் காய வைக்க மற்றொரு சிறிய கம்பியை வீட்டில் உள்ள இரும்பு கம்பியில் கட்டியுள்ளார். அதில் துணிகளை காயவைத்த தங்கமணி, காய்ந்த துணிகளை எடுக்க சென்றார். அப்போது வீட்டில் இருந்த இரும்பு கம்பி வழியாக கொடி கம்பியில் மின்சாரம் பாய்ந்து தங்கமணி மீது மின்சாரம் பாய்ந்தது. மூக்கில் ரத்த வெள்ளத்தில் சரிந்த தங்கமணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தங்கமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த திருவோணம் போலீசார், தங்கமணியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக திருவோணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரசாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மின்சாரம் தாக்கி உயிரிழந்த தங்கமணிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் திருமண நாளில் மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
