சோகம்... ஆறு, ஏரியில் மூழ்கி சிறுவர், சிறுமிகள் 7 பேர் பலி!

 
கடல் நீர் மூழ்கி தண்ணீர் மரணம்

நேற்று தமிழ் வருடப் பிறப்பு விடுமுறை தினத்தில், ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் ஆறு, ஏரி, குளங்களில் மூழ்கி 37 சிறுவர், சிறுமியர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த ரம்ஜான் தைக்கால் ஜாகிர் உசேன் நகரைச் சேர்ந்த முஹிபுல்லா மகன் உபயத்துல்லா (8), 4ம் வகுப்பும், ஜாபர் சாதிக் மகன் முகமதுஅபில் (10) 5ம் வகுப்பும், சாதிக் மகன் சேக் அப்துர்ரஹ்மான்(13) 8ம் வகுப்பும் படித்து வந்தனர். நண்பர்களான 3 பேரும் நேற்று விடுமுறை என்பதால் வெள்ளையங்கால் ஓடையில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது மூன்று பேரும் நீரில் மூழ்கி பலியாகினர்.

கடல் நீர் மூழ்கி தண்ணீர்

அதே போன்று கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை ராம்நகர் பகுதியை சேர்ந்த முத்தப்பா மற்றும் அவரது உறவினரான பெங்களூரு சர்ஜாபூர் பகுதியை சேர்ந்த சென்னப்பன் ஆகிய இருவரும் குடும்பத்துடன், ஒகேனக்கல்லுக்கு நேற்று சுற்றுலா சென்ற நிலையில், ஆலம்பாடி காவிரி ஆற்றில் குடும்பத்துடன் குளித்தனர்.அப்போது முத்தப்பா மகள் பாக்கியலட்சுமி(10), சென்னப்பா மகள் காவியா(16) ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நீரில் மூழ்கி

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தை சேர்ந்த சேகர் மகள் ஸ்வேதா (12) 7ம் வகுப்பும் சிவக்குமார் மகள் சிவசக்தி (11) 6ம் வகுப்பும் படித்து வந்தனர். விடுமுறை என்பதால் நேற்று மாலை 10க்கும் மேற்பட்ட பள்ளி சிறுமிகளுடன் ஏரியில் குளிக்க சென்றனர். அப்போது ஸ்வேதா மற்றும் சிவசக்தி ஆகியோர் நீரில் மூழ்கி இறந்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web