சோகம்...மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்த 3 வயது குழந்தை..!

சென்னை துரைப்பாக்கத்தில் வசித்து வருபவர் உதயன், மீனா தம்பதியினர். இவர்களுக்கு, 3 வயதில் பிரதிக்ஷா என்ற குழந்தை உள்ளது. இக்குழந்தை வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தது.
எந்தவித பாதுகாப்பு வேலிகளும் இல்லாமல் அமைக்கப்படும் மழைநீர் வடிகால் கால்வாயில் குழந்தை திடீரென தவறி விழுந்துவிட்டது. கத்தி அழுது குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தது. இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் பிரதிஷாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாதுகாப்பு வேலிகளோ, உபகரணங்களோ இல்லாமல் வடிகால் கால்வாய் பணிகளை மேற்கொள்வதால் தான் விபத்து நேரிடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் குழந்தை கால்வாயில் விழுந்ததற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணம் எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!