சோகம்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் கிணற்றில் விழுந்து பலி!

 
காதலியுடன் பேசிக்கொண்டே கிணற்றில் குதித்த காதலன்!!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே விவசாயக் கிணற்றில் விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் பரிதாபமாக பலியான சம்பவம் அந்த பகுதியினரிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் டி.ஆர்.பஜார் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி ஷாலினி. இவர்களுக்கு நிதிஷ்(5), பிரணிதா(3) என 2 குழந்தைகள் உள்ளனர். சதீஷ்குமாரும், ஷாலினியும் சேர்ந்து அதே பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர்.

குழந்தை  பலி

இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் இவர்களது விவசாய தோட்டத்தில் குழந்தைகளுடன் ஷாலினி வேலை செய்து கொண்டிருந்தார். குழந்தைகள் 2 பேரும் விளையாடிக் கொண்டிருந்தனர். சதீஷ்குமார் வெளியே சென்றிருந்தார். 

இந்நிலையில் விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைக் காணாமல், ஷாலினி அப்பகுதியில் தேடினார். அப்போது விவசாய நிலத்தில் உள்ள சுமார் 5 அடி ஆழ கிணற்றில் நிதிஷ், பிரனிதா ஆகிய இருவருமே நீரில் மூழ்கிய படி பரிதாபமாக உயிரிழந்து கிடப்பதைக் கண்டு கதறி அழுதார்.

கிணறு

தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கண்ணீர் விட்டு அழுதனர். இதைத்தொடர்ந்து நடுவட்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். இந்த சம்பவம் நடுவட்டம் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web