சோகம்... கிணற்றில் தவறி விழுந்து வாட்ச்மேன் பலி!

தூத்துக்குடியில் அஸ்பெஸ்டாஸ் சீட் கூரை மீது ஏறி நின்று மரக் கிளைகளை வெட்டியபோது, சீட் உடைந்ததால் கிணற்றில் தவறி விழுந்து வாட்ச்மேன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி கீழ சண்முகபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பொன் மாரியப்பன் (58), இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும் ஆனந்த் மற்றும் நவீன் ராஜ் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். பொன் மாரியப்பன் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நகைக்கடையில் வாட்ச்மேன் ஆக வேலை பார்த்து வருகிறார். இன்று மாலை 5மணியளவில் அவரது வீட்டில் அஸ்பெஸ்டாஸ் சீட் மீது ஏறி நின்று முருங்கை மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அஸ்பெஸ்டாஸ் கூரை உடைந்து பொன் மாரியப்பன் அருகிலுள்ள கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு வெளியே கொண்டு வந்தபோது அவர் இறந்த நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!