அயோத்தியில் ராமர் கோயில் கோபுரத்தில் காவிக்கொடி ... இன்று பிரதமர் மோடி ஏற்றி வைப்பு!
அயோத்தியில் பிரமாண்டமாக எழுந்துள்ள ஸ்ரீ ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கோயிலின் 161 அடி உயர பிரதான கோபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 25) புனித காவிக் கொடியை ஏற்றவுள்ளார். பட்டு நூலும், பாராசூட் துணியும் கலந்த உறுதியான பொருட்களால் தயாரிக்கப்பட்ட இந்த 20 அடி நீளம் கொண்ட முக்கோணக் கொடியில் “ஓம்”, மந்தாரை மரம், ஒளிரும் சூரியன் போன்ற புனிதச் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
ஒருநாள் பயணமாக அயோத்தி வரும் பிரதமர் மோடி, சேஷாவதாரம் கோயிலும், அன்னபூரணி தேவி ஆலயமும், சப்த மந்திர் உள்ளிட்ட பல தலங்களிலும் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் நண்பகல் 12 மணிக்கு ராமர் கோயில் கோபுரத்தில் காவிக்கொடியை ஏற்றி, பக்தர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். மூலவர் ஸ்ரீ பாலராமரை தரிசிப்பதுடன், ராம தாபாரில் நடைபெறும் சிறப்பு பூஜைகளிலும் பங்கேற்கிறார்.

விவாஹ பஞ்சமி தினத்தையொட்டி நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர். பொதுமக்களுக்கான தரிசனம் அன்று நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நிகழ்ச்சி முழுவதும் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. பக்தர்கள் காணும் வசதிக்காக ராமஜன்மபூமி வளாகத்தில் 200 அடி அகல எல்.இ.டி திரை உள்பட நகரம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட பெரிய திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
