எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது... குவியும் பாராட்டுக்கள்.!

 
தேவி பாரதி

மத்திய அரசின் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு  தமிழில் வெளியான ‘நீர் வழிபடூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அரசால் ஒவ்வொரு வருடமும், தேசிய அளவிலும், மாநில அளவிலும்  சாகித்ய அகாடமி அங்கீகரித்த மொழிகளில் இலக்கியப் படைப்புகளுக்கு ஆண்டு தோறும் 24 விருதுகளையும், இந்திய மொழிகளில் இருந்து இலக்கிய மொழிபெயர்ப்புகளுக்கு சம எண்ணிக்கையிலான விருதுகளையும் வழங்குகிறது.

தேவி பாரதி

அதன்படி இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது தமிழுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழில் ‘நீர் வழிபடூஉம்’ என்ற  நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதி சாகித்ய அகாடமி  விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேவி பாரதி
எழுத்தாளர் தேவி பாரதி, ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் ராஜசேகரன். 40 ஆண்டுகளாக எழுதி வருகிறார். நிழலின் தனிமை என்ற நாவல்  இவரது சிறந்த படைப்பாக போற்றப்படுகிறது.  அற்ற குளத்து அற்புத மீன்கள்,  பிறகும் ஒரு இரவு,  நொய்யல் உள்ளிட்ட பல படைப்புகளை படைத்துள்ளார்.ஆரம்பப் பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர் பிறகு முழுநேர படைப்பாளியாக ஆனார். அவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதை எடுத்து எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள்  அவருக்கு பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web