சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு திடீர் ஒத்திவைப்பு... எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் ஏமாற்றம்!
இலக்கிய உலகில் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டுக்கான விருதுகள் இன்று மதியம் அறிவிக்கப்படவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

விருது பெறுபவர்களின் பட்டியலை இறுதி செய்வதில் ஏற்பட்ட தாமதமே நிகழ்ச்சி ரத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மொழிகளுக்கும் உரிய தேர்வு பணிகள் முழுமையடையாததால், அறிவிப்பை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அறிவிப்பு முழுமையாக கைவிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இரவுக்குள் விருது பெறுபவர்களின் பட்டியல் வெளியிடப்படும் என சாகித்ய அகாடமி தரப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திடீர் மாற்றம் இருந்தாலும், விருது அறிவிப்பு இன்று வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இலக்கிய வட்டாரங்களில் தொடர்கிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
