சாகித்ய அகாடமி விருது வென்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்!

 
ஈரோடு தமிழன்பன்

தமிழ் இலக்கிய உலகில் மரபுக் கவிதை, புதுக்கவிதை, நாடகம், சிறுவர் இலக்கியம் எனப் பல்வேறு தளங்களில் ஆழமான பங்களிப்பை வழங்கிய மூத்த கவிஞரும், முன்னாள் பேராசிரியருமான ஈரோடு தமிழன்பன் வயது மூப்பு காரணமாக இன்று (நவம்பர் 22, 2025) காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு இலக்கிய உலகத்தினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஈரோடு தமிழன்பன் அவர்கள் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அவர் வெறும் கவிஞர் மட்டுமல்ல, பல்வேறு தளங்களில் இயங்கி தமிழ் மொழிக்குச் செழுமை சேர்த்தவர். இவர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிப் பல மாணவர்களுக்குக் கல்வி புகட்டியவர்.

தமிழ் இலக்கியத்தின் தவப்புதல்வர்! சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்!

பொதிகை தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. கலைஞர்: ஓவியர், பாடலாசிரியர் எனப் பன்முகத்தன்மை கொண்ட இவர், 50க்கும் மேற்பட்ட கவிதை நூல்களை எழுதியுள்ளார். மரபுக் கவிதை, புதுக்கவிதை, நாடகம், புதினம், சிறுகதை, சிறுவர் இலக்கியம் என அனைத்து விதமான இலக்கிய வகைகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர்.

கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் இலக்கியச் சேவைக்காக மத்திய, மாநில அரசுகள் அவருக்குப் பல உயரிய விருதுகளை வழங்கிச் சிறப்பித்துள்ளன: இவரின் புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பான "வணக்கம் வள்ளுவ" நூலுக்காக, 2004-ஆம் ஆண்டு மத்திய அரசின் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார். தமிழக அரசின் உயரிய விருதான 'கலைமாமணி' விருதையும் இவர் பெற்றுள்ளார்.

தமிழ் இலக்கியத்தின் தவப்புதல்வர்! சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்!

சமீபத்தில், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கும் மதிப்புமிக்க 'கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை'ப் பெற்று கௌரவிக்கப்பட்டார். இத்தகைய சிறப்பு வாய்ந்த கவிஞரின் மறைவு, தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகக் கருதப்படுகிறது. அவரது படைப்புகளும், பங்களிப்புகளும் காலத்தால் அழியாதவையாக என்றும் நிலைத்திருக்கும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!