அமீர்கானுடன் இணையும் சாய்பல்லவி!

 
அமீர்கான்

 நடிகை சாய்பல்லவி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் அமரன் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  இதுவரை ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்தனர்.  இந்துவாக நடித்திருக்கும் சாய்பல்லவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களையும்  தெரிவித்து வருகின்றனர்.

அமரன்

இந்நிலையில், அமரன் பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, சாய்பல்லவி அடுத்ததாக அமீர்கானுடன் இணைந்திருப்பதாக கூறியுள்ளார்.  அதன்படி, அமீர்கான் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ஒரு படத்தில் நடிகை சாய்பல்லவி நடித்து வருவதாகவும், இந்தியில் உருவாகி வரும் இப்படம் விரைவில் திரைக்கு வர இருப்பதாகவும் கூறியுள்ளார்.  

ஏற்கனவே நிதிஷ் திவாரி இயக்கத்தில் தயாராகும் 'ராமாயணம்' படத்தில் சீதையாக நடித்து வருகிறார்.  2 பாகங்களாக உருவாகும் இப்படத்தின் 1 ம் பாகம் 2026ம் ஆண்டு தீபாவளிக்கும், 2ம் பாகம் 2027ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக இருப்பது  குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!