சாயிபாபா அருளுரை... கலங்காதே… நீ என்னை நோக்கினால் நானும் உன்னை நோக்குவேன்!

 
சாயிபாபா
 

"சாய் பாபா…" என நாமம் ஜபிக்கும்போதே ஒரு ஆழ்ந்த அமைதி மனதைக் குளிர்விக்கும். இந்துக்கள் இவரை தத்தாத்திரேயரின் அவதாரமாகவும், உயர்ந்த குருநாதராகவும் கருதுகின்றனர். எந்த வீட்டில் சாயிபாபாவின் திருநாமம் ஒலிக்கிறதோ, அந்த இல்லமே அருளால் நிறையும் எனும் நம்பிக்கையில் கோடி கணக்கான பக்தர்கள் வாழ்கின்றனர். சீரடியில் அவர் சமாதி பெற்ற இடம் இன்று பக்தர்கள் கண்ணீர் வடியுமாறு பிரார்த்தனை செய்யும் புண்ணியத் தலமாக ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பேரை வரவேற்கிறது.

உன் நம்பிக்கை உன்னை வெல்ல வைக்கும் !! சாயிபாபா அருளுரை!!

சீரடி துவாரகாமாயீயிலுள்ள பாபா ஏற்றி வைத்த அக்கினிக் குண்டம் இன்றும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது என்பதே பலருக்கு அதிசயமாய் படுகிறது. அந்த அக்னி முன் அமர்ந்து தியானம் செய்வதும், அதிலிருந்து 'உதி' விபூதியை பக்தர்களுக்கு அருள்வதும் பாபாவின் வழக்கம். மிக வல்லமை கொண்டதாகக் கருதப்படும் இந்த 'உதி' அனைத்து துன்பங்களையும், நோய்களையும், ஊழ்வினைகளையும் நீக்க வல்ல சக்தி என பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

சாயிபாபா

பாபாவின் வாழ்நாள் அற்புதங்கள் என்றே சொல்ல வேண்டும். உயிரிழந்தவருக்கு உயிர் கொடுத்ததும், உணவு அள்ள அள்ளக் குறையாமல் வழங்கியதும், நோய்களுக்கு நிவாரணம் தந்ததும், கெட்டவர்களிடமிருந்து காத்ததும, ஒரே நேரத்தில் பல இடங்களில் திகழ்ந்து அருள் புரிந்ததும்இப் பல நிகழ்வுகள் மக்கள் நினைவில் ஆழமாக பதிந்திருக்கின்றன. “கலங்காதே… நீ என்னை நோக்கினால் நானும் உன்னை நோக்குவேன்” என்ற பாபாவின் வாக்கு இன்று வரை லட்சக்கணக்கான இதயங்களுக்கு ஓர் ஆறுதல். அவரை நாடி வரும் ஒவ்வொரு பக்தருக்கும் இன்று கூட அருள் பொழிவதை உணர்கிறார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!