அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ18000 வரை ஊதிய உயர்வு... சாம்சங் ஊழியர்கள் வரவேற்பு!

 
அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ18000 வரை ஊதிய உயர்வு... சாம்சங் ஊழியர்கள் வரவேற்பு!  
சாம்சங் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிறுவன ஊழியர்களுக்கு அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்தியா தொழிலாளர்கள் சங்கம் விடுத்த ஊதிய உயர்வு   தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சாம்சங் நிறுவனத்தின் நிர்வாகத்தினர் மற்றும் சிஐடியு தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

 
நீண்ட இழுபறிக்குப் பின்னர் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டது. இதன் விளைவாக, சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ18000 வரை ஊதிய உயர்வு... சாம்சங் ஊழியர்கள் வரவேற்பு!  
அதன்படி, 2025-26ம் ஆண்டில் தொழிலாளர்களுக்கு ரூ.9,000 ஊதிய உயர்வு வழங்கப்படும். தொடர்ந்து, 2026-27 மற்றும் 2027-28 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கும் தலா ரூ.4,500 வீதம் ஊதிய உயர்வு அளிக்கப்படும். இதன் மூலம், மூன்று ஆண்டுகளில் தொழிலாளர்கள் மொத்தம் ரூ.18,000 ஊதிய உயர்வைப் பெறுவார்கள் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கு கொரோனா நிவாரண உதவி! சாம்சங்!

மேலும், தொழிலாளர்களின் பணி அனுபவத்தைக் கருத்தில் கொண்டு சிறப்பு ஊதிய உயர்வும் வழங்கப்படும் எனவும்,  இதன்படி, மூன்றாண்டு காலத்தில் ரூ.1,000 முதல் ரூ.4,000 வரை கூடுதல் ஊதியம் கிடைக்கும் என கூறியுள்ளது.அதே போல்  நீண்ட காலமாக பதவி உயர்வுக்காக காத்திருக்கும் தொழிலாளர்களுக்கு ஒருமுறை சிறப்பு பதவி உயர்வு வழங்கப்படும்.  அத்துடன் தொழிலாளர்களுக்கு கூடுதல் விடுப்பு சலுகைகள், நீண்ட காலம் பணியாற்றியவர்களுக்கு விருது, குளிரூட்டப்பட்ட பேருந்து வசதி உட்பட  பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவுள்ளன.இந்த உடன்பாடு சாம்சங் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது