இன்று முதல் மலிவு விலையில் துவரம் பருப்பு, உளுந்து, தக்காளி விற்பனை!!

 
அமுதம் அங்காடி

தமிழகத்தின் பல பகுதிகளில் மழை , விளைச்சல் மற்றும் வரத்து குறைவு  காரணமாக தக்காளியின் விலை   உச்சம் தொட்டுள்ளது. தக்காளியின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு ரேஷன் கடைகள் மற்றும் பசுமை பண்ணை கடைகள் மூலம் தக்காளியை கொள்முதல் செய்து கொள்முதல் விலைக்கே விற்பனை செய்து வருகிறது. இதனால் நேற்றும், இன்றும் தக்காளியின் விலை வெளிச்சந்தையில் ஓரளவு குறையத் தொடங்கியுள்ளது.

அமுதம்

அதே நேரத்தில் மழை காரணமாக மேலும் சில வாரங்களுக்கு இந்த விலை உயர்வு நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.  தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயம்,  பீன்ஸ், இஞ்சி என அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. அத்துடன் துவரம் பருப்பு, உளுந்தின் விலையும் அதிகரித்துள்ளதால் நடுத்தர மக்களின் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்த திடீர் விலை உயர்வால் திண்டாடி வருகின்றனர்.  

அமுதம்

இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு உணவுத்துறை சார்பில் இன்று முதல் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவை கொள்முதல் விலைக்கே விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது. இதன் படி அமுதம் அங்காடிகளில்  துவரம் பருப்பு 150 ரூபாய்க்கும் உளுத்தம் பருப்பு 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web