சேலத்தில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் கைது!

 
கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர்

சேலம் மாவட்டத்தில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ளது காமக்காப்பாளையம்.இந்த ஊரைச் சார்ந்தவர் கண்ணையன் விவசாயி. இவரது நிலத்தை அளப்பதற்காக காமக்காப்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி பிரபு மற்றும் கிராம நிர்வாக அதிகாரியின் உதவியாளர் வேல்முருகன் ஆகியோர் ரூ.10,000 லஞ்சம் கேட்டனர்.

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

இந்த பணத்தை தர விரும்பாத விவசாயி கண்ணையன் இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில் காவல் ஆய்வாளர்கள் முருகன் மற்றும் ரவிக்குமார் இன்று காலை விவசாயி கண்ணையனிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.10,000 பணத்தைக் கொடுத்து அனுப்பினர். இதனை கிராம நிர்வாக அதிகாரி பிரபு மற்றும் உதவியாளர் வேல்முருகன் பெற்றுக்கொண்டார்.

இளம் நடிகர் கைது

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கையும் களவுமாக விவசாயிடம் லஞ்சம் பெற்ற விஏஓ கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது