பச்சிளம் குழந்தையை விட்டு இளம் தாய் தூக்கிட்டு தற்கொலை... பெரும் சோகம்!

 
salem salem

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் சினேகா (22), தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.பேளூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (25) என்பவர் அப்பகுதியில் ஆன்லைன் சேவை மையம் நடத்தி வருகிறார். இவரும் சினேகாவும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர்.

ஆம்புலன்ஸ்

இந்தத் தம்பதிக்கு யாசினி என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. நேற்று சினேகா தனது வீட்டில் திடீரெனத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

போலீஸ்

தகவலறிந்து வந்த வாழப்பாடி போலிஸார், சினேகாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சினேகா தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்துப் போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4 ஆண்டுகளுக்குள்ளேயே இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதால், வரதட்சணை கொடுமை அல்லது குடும்பத் தகராறு ஏதேனும் காரணமா என்பது குறித்துச் சேலம் உதவி ஆட்சியர் (RDO) மற்றும் வாழப்பாடி துணைப் போலிஸ் சூப்பிரண்டு சபரிநாதன் ஆகியோர் விசாரணை நடத்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!