ராணி முகர்ஜியை அறிமுகப்படுத்திய பிரபல தயாரிப்பாளர் சலீம் அக்தர் காலமானார்... திரைப் பிரபலங்கள் இரங்கல்!

 
 சலீம் அக்தர்
பிரபல இந்தி திரைப்படத் தயாரிப்பாளர் சலீம் அக்தர்  வயோதிகம் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 82.

1970களிலும், 80களில் ஏராளமான இந்தி திரைப்படங்களை தயாரித்த சலீம் அக்தர், 1993ல் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘ஃபூல் ஆர் அங்கார்’, 1995ல் ஆமிர்கான் நடிப்பில் வெளியான ‘பாஸி’ உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். 

 சலீம் அக்தர்

இந்தியில் நடிகை ராணி முகர்ஜியை ‘ராஜா கி ஆயேகி பாரத்’ (1997) படம் மூலம் அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் சலீம் அக்தர்.  இது தவிர சோரோன் கி பராத் (1980), லோஹா (1987), பட்வாரா (1989), பாஸி (1995), இஸ்ஸத் (1968), பாதல் (2000) உள்ளிட்டவை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.

 சலீம் அக்தர்

இந்நிலையில் நேற்று ஏப்ரல் 8ம் தேதி மும்பையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த சலீம் அக்தர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.  சலீம் அக்தரின் மறைவுக்கு இந்தி திரைப்பட பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web