சல்மான் கான் குடும்பத்திற்கு மிரட்டல் - ஆயுஷ் சர்மாவிற்கு வந்த மிரட்டல்!

 
சல்மான் கான்

சல்மான் கானைத் தொடர்ந்து, தற்போது அவரது சகோதரி அர்பிதாவின் கணவரும் நடிகருமான ஆயுஷ் சர்மாவிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை நடிகர் ஆயுஷ் சர்மாவிற்கு மர்ம நபர் ஒருவரிடமிருந்து ஈமெயில் வந்துள்ளது. அந்த மின்னஞ்சலை அனுப்பியவர் தான் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மிரட்டல் விடுத்த நபர், கிரிப்டோகரன்சி மூலம் பெரும் தொகையைப் பணம் கேட்டு மிரட்டியுள்ளதாகத் தெரிகிறது. பாலிவுட்டில் கடந்த சில நாட்களாகவே மிரட்டல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஆயுஷ் சர்மாவிற்கு மிரட்டல் வருவதற்கு ஒரு நாள் முன்னதாக, நடிகர் ரன்வீர் சிங்கிற்கும் வாட்ஸ்அப் மூலம் ஆடியோ மிரட்டல் வந்தது. அதில் அவரிடம் ரூ.10 கோடி பணம் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த வாரம் பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் வீட்டின் அருகே மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கும் பிஷ்னோய் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

மும்பை குற்றப்பிரிவு போலீசார் இந்த விவகாரத்தைத் தீவிரமாகக் கையாண்டு வருகின்றனர். சல்மான் கானின் குடும்பத்தினர் மற்றும் மிரட்டல் வந்த இதர நடிகர்களின் வீடுகளுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பிஷ்னோய் கும்பலின் ஒரு பிரிவைச் சேர்ந்த 5 பேர் மீது மகாராஷ்டிராவின் கடுமையான சட்டமான 'மக்கோகா' கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மிரட்டல் வந்த மின்னஞ்சல்கள் மற்றும் ஆடியோ கிளிப்களைச் சைபர் க்ரைம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்ச்சியாக முன்னணி நட்சத்திரங்களுக்கு மிரட்டல் வருவதால் பாலிவுட் திரையுலகினர் கடும் அச்சத்தில் உள்ளனர். இது குறித்துப் பேசிய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தின் (FWICE) நிர்வாகிகள், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸைச் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!