நடிகை சமந்தா சொல்லும் ரகசியம்... காலை ஒரு மணிநேரம் இதை செய்யாதீங்க!
சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகை சமந்தா, தனது பிசியான நேரத்திலும் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறார். சமூக வலைதளங்களில் அவர் பகிரும் உடல்நலம் சார்ந்த ஆலோசனைகள் அவரது ரசிகர்களுக்கு பெரும் உத்வேகத்தை அளித்து வருகின்றன. அந்த வகையில், காலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய மிக முக்கியமான மாற்றங்கள் குறித்து சமந்தா தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் காட்டுத்தீயாக பரவி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

காலையில் எழுந்தவுடன் உடலில் கார்டிசோல் அளவு அதிகமாக இருக்கும் என்பதால், முதல் ஒரு மணி நேரத்திற்கு செல்போன், மெயில் மற்றும் செய்திகளைப் பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று சமந்தா அறிவுறுத்தியுள்ளார். இதற்கு பதிலாக நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த 2 முதல் 5 நிமிடங்கள் வரை ஆழ்ந்த சுவாசப் பயிற்சியில் ஈடுபடுவது அவசியம் என அவர் கூறியுள்ளார். இந்த எளிய முறையை தொடர்ந்து 21 நாட்களுக்கு பின்பற்றி வந்தால், நரம்பு மண்டலம் சீரடைந்து உடலில் ஏற்படும் அழற்சிகள் குறைய வாய்ப்புள்ளதாக அவர் தனது அனுபவத்தின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

சரியான முறையில் சுவாசிப்பது வேகஸ் நரம்பைத் தூண்டி மூளைக்கு ஒருவித பாதுகாப்பு உணர்வைத் தருவதோடு, கொழுப்பை எரித்து உடலைச் சீரமைக்க உதவுகிறது என்றும் சமந்தா விளக்கியுள்ளார். ரத்த அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க அதிகாலை சூரிய ஒளியில் நிற்பது மற்றும் சத்தான காலை உணவை உட்கொள்வது போன்ற பழக்கங்களை அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், காலை 11 மணிக்குள் உடற்பயிற்சியை முடித்துவிட்டு அன்றைய இலக்குகளை எழுதி வைப்பது மனத்தெளிவைத் தரும் என அவர் கூறியுள்ள கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
