சமயபுரம் சித்திரை தேர்த் திருவிழா... 13ம் நாளில் தெப்பத்தேரில் காட்சியளித்தார் மாரியம்மன்!

 
திருச்சி சமயபுரம் மாரியம்மன் சித்திரைத் தேர்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில்சித்திரை தேர் திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 18 ந்தேதி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் சித்திரைத் தேர்

இந்நிலையில்  திருவிழாவின் 13ம் நாளான  நேற்று  காலை அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்துக்கு சென்றடைந்தார். மாலையில் 5 மணிக்கு அபிஷேகம் கண்டருளிய பின்னர் இரவு 8 மணிக்கு மேல் அம்மன் வசந்த மண்டபத்தில்  சிறப்பு அலங்காரத்தில்  எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து கோயில் உள்பிரகாராம்  கடை வீதிகளில் திருவீதி உலா வந்து தெப்பத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக மூலஸ்தானம் சென்றடைந்தார். 

திருச்சி சமயபுரம் மாரியம்மன் சித்திரைத் தேர்

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் தலைமையில், கையில் பணியாளர்கள், குருக்கள்கள்,பக்தர்கள் செய்திருந்தனர்.சமயபுரம் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அம்மனையும் வாணவேடிக்கையையும் காண ஆயிரக்கணக்கான மக்கள் சமயபுத்தில் கூடியிருந்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web